Breaking News

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை:   

இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக ஜனவரி 25-ம் நாள் மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.

ஆகவே, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்டக் கழக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, கழக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் முன்னோடிகள் நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments