இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாத அவலநிலை
திருவள்ளூர், ஜன.5-
திருவள்ளூர் மாவட்டத்தில் அணைக்கட்டு கிராமத்தில் மழைக்காலங்களில் பல ஆண்டுகளாக இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அணைக்கட்டு சேரி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இந்த அவலநிலை பலஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட அணைக்கட்டு கிராமத்தில் பல ஆண்டுகளாக மழைகாலங்களில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதில் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதைப்பற்றி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் மோகன் என்பவர் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் ஆற்றங்கரையை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். வேறுவழியின்றி ஆற்றங்கரையில் சடலத்தை எரித்ததால் அதை சுற்றி வாழும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் தொடர்ந்து இப்பகுதியில் அவதிப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது இதனை உடனடியாக சரி சரிசெய்ய ஆற்றில் பாலம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கை.
கடந்த அரசு இதனை கண்டுக்கொள்ளாத நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் இவர்களுக்கு இந்த பகுதியில் பாலம் அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாழும்போதும்... வாழ்வு முடிந்த பிறகும் இந்த கிராம மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை..... இவர்கள் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காணுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
No comments
Thank you for your comments