கொரோனா கட்டுப்பாடு நவீன மென்பொருள் வாயிலாக அகண்ட திரையில் கண்காணிப்பு
கோவை, ஜன.12-
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களையும், சோதனை சாவடிகளில் சோதனை நடைபெறுவதையும் நவீன மென்பொருள் மூலம் கண்காணிக்கும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால்சுன்கரா மாநகர காவல் துணை ஆணையர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர்(பயிற்சி) சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்திடவும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டவர்களை கண்காணிக்கவும், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், ஜமீன்காளியபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம், செமனாம்பதி, ஆணைக்கட்டி உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் சோதனை நடைபெறுவதை கண்காணிக்கவும், நவீன மென்பொருள் மூலம் செயல்படும் இணையதளம் மற்றும் கணிணித்திரை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
No comments
Thank you for your comments