காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சாரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சாரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் திரளான திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965ம் ஆண்டு ஜனவரி 25-ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாக வெடித்தது.அப்போராட்டத்தின் போது இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதியன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இன்று ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாளில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சாரில் காஞ்சிபுரம் டி.கே.நம்பித் தெருவில் அமைந்துள்ள காஞ்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் திரளான திமுகவினர் கலந்துக்கொண்டு மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், வீர வணக்க கோசங்கள் இட்டும், 2 நிமிட மெள அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம், காஞ்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.சேகர், காஞ்சி நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், நகர அவைத் தலைவர் சந்துரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன, முருகன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.எஸ்.முத்துசெல்வம், திமுக நிர்வாகிகள் அபுசாலி, சோபன்பாபு, யுவராஜ்,செவிலிமேடு மோகன், தசரதன், சுரேஷ், எஸ்.கே.பி.கார்த்தி, மகளிரணி நிர்வாகள் உள்ளிட்ட திமுக மாவட்ட,ஒன்றிய நகர நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments