நிதி வழங்கியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை - வியாபாரிகள் புகார்
வேலூர்:
வேலூரில் நிதி வழங்கியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை என வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஞானவேலு தலைமையில் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
வியாபாரிகள் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. அதில் வணிக பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வணிகர்கள் நிதி சேர்த்து கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என தெரிவித்தனர். அதனடிப்படையில் வணிகர் சங்கம் சார்பாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது.
அதில் வேலூர் ரெடிமேடு வணிகர் சங்கம் சார்பில் பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரூ.2 லட்சத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.
இதுவரை பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இந்த பகுதி முக்கியமான வணிகப் பகுதி ஆகும். இந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், மற்றும் அனைத்து ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சுபாஷ் ஜெயின், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments