இந்திய கடற்படைக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் ஐஎன்எஸ் வல்சுராவில் கருத்தரங்கு
இந்திய கடற்படையின் முதன்மையான தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமான ஐஎன்எஸ் வல்சுரா, ‘இந்திய கடற்படைக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்’ என்னும் தற்காலத் தலைப்பிலான கருத்தரங்குக்கு ஜனவரி 19 முதல் 21 வரை ஏற்பாடு செய்திருந்தது.
கடற்படையின் தெற்கு பிரிவின் கீழ் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், கூகுள், ஐபிஎம், இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற பிரபலமான ஐடி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உரையாற்றினார்கள்.
ஐஐடி தில்லி, நியூயார்க் பல்கலைக்கழகம், அமிர்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த கல்வியாளர்களும் இதில் கலந்து கொண்டு நவீனகால போக்கு மற்றும் நடைமுறைகள் பற்றி விளக்கினர். செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அவர்கள் விளக்கினர்.
இதில் முக்கிய உரையாற்றிய, கடற்படை தெற்குப் பிரிவின் தலைமைதளபதி கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் எம்ஏ ஹம்பிஹோலி, கடற்படையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
நாடு முழுவதிலும் இருந்து 500-க்கும் அதிகமானோர் இந்த இணையவழிக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக உருவாக்க வேண்டும் என்பதுடன், அனைவரும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற நாட்டின் தொலைநோக்கை எட்டும் வகையில், இந்திய கடற்படை இத்தகைய முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
No comments
Thank you for your comments