வேலூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
வேலூர், ஜன.26-
73வது குடியரசு தினத்தையொட்டி வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் இன்று (26.01.2022) தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய நாட்டின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் இன்று (26.01.2022) தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நேதாஜி விளையாட்டரங்கில் குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பின்னர் வெண்புறாக்களை பறக்க விட்டார்கள். இதனைத்தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் காவலர் நற்பணி பதக்கம் 48 காவலர்களுக்கு பதக்கத்தையும், பாராட்டு சான்றிதழ்களையும் மேலும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த 106 அலுவலர்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுச் சான்றிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள்.
மேலும், கல்வி நிறுவனங்களை சார்ந்த துறை தலைவர்கள் 8 நபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் 8 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.ஆனி விஜயா இ.கா.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஷ் கண்ணன்,இ.கா.ப., வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணு பிரியா, துணை காவல் கண்காணிப்பாளர்கள், துணை ஆட்சியர்கள், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வி துறை தாட்கோ, வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments