Breaking News

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ்...

கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.அருணா, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 80 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 38,67,926 ஆகும்.இதில் 27,90,400 மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள். இவர்களில் 27,00,051 பேர் முதல் தவணை தடுப்பூசி (96.76 சதவீதம் பேர்) செலுத்தியுள்ளனர். 22,54,103 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி (80.78சதவீதம்) செலுத்தியுள்ளனர்.  

அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதில் மாநில அளவில் முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது.

தற்போது, 15- 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 97,404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,674 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 2-3 நாட்களில் முடிவடையும்.

மாவட்டத்தில் 85,554 மருத்துவத்துறை பணியாளர்கள், 91,762 முன்களப் பணியாளர்கள், 72,112 நபர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு எனமொத்தம் 2,49,428 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்.

கடந்த மே மாதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட மருத்துவத் துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என 70,955 நபர்கள் மட்டுமே தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர். 

அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி   அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஜனவரி 31-க்குள் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

மாவட்டத்தில் 9800 படுக்கைவசதிகள் கொரோனா நோய் தொற்றிற்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. 

கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4300க்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் 129 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்கலன், 31 ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் (PSA Plant) என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் சதவீதம் உயர்ந்து வந்தாலும், மருத்துவமனையில் அனுமதிப்படுவோர்களின் எண்ணிக்கை. குறைவாகவே உள்ளன. 

பேருந்துகளில் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றியும், அரசு அனுமதித்துள்ள அளவு மட்டுமே பயணிகளை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்புபணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடிகள் வழியாக மாவட்டத்திற்குள் வரும் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று வைத்திருக்கவேண்டும். 

மேலும், கொரோனா தடுப்பூசி(இரண்டு தவணை) செலுத்தப்பட்டதற்கான சான்று உடன் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை 99 சதவீதம் பயணிகள் வைத்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களாகவும், RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று இல்லாமால் இருப்பது தெரியவந்தது. 

அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள், மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி 96 மிகச்சிறிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மாவட்டத்தில் உள்ளன. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் மூலமாக இதுவரை 6000க்கு மேற்பட்டவர்கள் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 4பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று கண்டறியபட்டுள்ளன. 

ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பிற அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் குறைவான தொற்று பாதிப்பு உள்ளவர்களை வீட்டிலே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்களை மட்டுமே வீடுகளில் மருந்துக்களை வழங்கவும் அவர்களை கண்காணிக்கவும் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணியில் 500க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், தற்போது,கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சதவீதம் பேர் வீடுகளில்  பாதிக்கப்பட்டவர்களில் 88தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

பொதுவெளியில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டும். அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். 



No comments

Thank you for your comments