Breaking News

வைகுண்ட ஏகாதசியொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத்னாங்கி சேவை உற்சவம்...

 காஞ்சிபுரம்

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத்னாங்கி சேவை உற்சவம்....

உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவிலான  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி யொட்டி தாத தேசிக சாத்துமுறை  உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்படும்

ரத்ன அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில்  அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.




No comments

Thank you for your comments