"இனி தமிழனுக்கு வீழ்ச்சியில்லை" நூல் வெளியீடு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரக் கழக முன்னாள் பொறுப்பாளர் நினைவில் வாழும் கே.ஜே. அகத்தியப்பன் 100 வது பிறந்தநாளையொட்டி "இனி தமிழனுக்கு வீழ்ச்சியில்லை" எனும் நூலை தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி வெளியீட்டாளர்.
காஞ்சி எனக்காக முன்னாள் பொறுப்பாளர் நினைவில் வாழும் கே ஜே அகத்தியர் அவர்களின் 100வது ஆண்டு பிறந்த நாள் விழாவை ஒட்டி நஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அவரது மகன் திரை எழுத்தாளரும், சின்னத்திரை இயக்குநருமான கே.ஏ. ராஜபாண்டியன் எழுதிய "இனி தமிழனுக்கு வீழ்ச்சியில்லை" எனும் நூல் வெளியீட்டு விழா காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில்தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஏ.செங்குட்டுவன் வரவேற்புரை நிகழ்த்த தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி இனி தமிழனுக்கு வீழ்ச்சியில்லை எனும் நூலை வெளியிட மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக இலக்கிய அணி துணைத்தலைவர் கவிதைபித்தன் , மேலான் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.எழிலரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வெளியீட்டு நூலை பெற்று கொண்டு அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பேசிய தொ.மு.ச. பொதுசெயலாளர் மு.சண்முகம் எம்.பி.,காஞ்சிபுரத்திற்கும் நூலுக்கும் பெரும் பொருத்தம் உண்டு எனவும் , நெசவாளரின் உழைப்பில் அழகான புடவையும் , அண்ணா பிறந்த மண்ணில் உள்ள அனைவரும் எழுதும் பழக்கம் ஒன்றும் புதிய தில்லை எனவும், ஒவ்வொரு திமுக உறுப்பினர்களும் இதை படித்து இயக்கத்தை வளர்த்த கதையும், தற்போதைய முதல்வரின் செயல்பாடுகள் என அனைத்தும் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
திராவிட பெருமை கூறும் நூல் மட்டுமல்ல இது.. இனி தமிழகத்திற்கு மட்டுமில்லை உலகத்திலுள்ள எந்த ஒரு தமிழனுக்கு வீழ்ச்சி இல்லை என்பதை பறைசாற்றுவோம் என தெரிவித்தார்.
இறுதியாக கே.ஜே.அகத்தியப்பன் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட அவை தலைவர் சி.வி.எம்.அ. சேகரன் , நகர அவை தலைவர் சந்துரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஏ.செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனுவாசன், காஞ்சி மாவட்ட தொ.மு.கவுன்சில் தலைவர் கே.ஏ.இளங்கோவன், கழக வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாட்சி சண்முகசுந்தரம், நாத்திகம் நாகராசன், பெ.சுந்தரவரதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments