Breaking News

கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு

ஈரோடு, ஜன.20-

ஈரோடு மாவட்டம்‌, திண்டல்‌ வேளாளர்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை கலெக்டர் ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி  நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌. 

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ போர்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்‌ தொடர்ந்து, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்‌ ஆகியவற்றில்‌ போதிய படுக்கைகளும்‌, ஆக்ஸிஜன்‌ வசதிகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ கொரோனா சிகிச்சை மையங்கள்‌ அமைக்கப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத்‌ தொடர்ந்து, நேற்று (19.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள்‌, ஈரோடு மாவட்டம்‌, திண்டல்‌ வேளாளர்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ 4  ஆக்சிஜன்‌ படுக்கை உட்பட சுமார்‌ 100  படுக்கை வசதிகளுடன்‌, அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை மையத்தில்‌ கொரோனா நோய்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சைகள்‌ குறித்தும்‌, அவர்களுக்கு வழங்கப்படும்‌ உணவுகள்‌ குறித்தும்‌ மருத்துவர்களிடம்‌ கேட்டறிந்தார்‌.

இந்த ஆய்வின்போது மாநகர்‌ நல அலுவலர்‌ (பொ) மரு.சுஜாதா (ஈரோடு), வட்டாட்சியர்‌ பாலசுப்பிரமணியம்‌ உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!

No comments

Thank you for your comments