Breaking News

சிறுவேடல் வெ.கணேசன் திருவுருவ படத்தை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரம், ஜன.28-

காஞ்சிபுரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களின் தந்தை சிறுவேடல் வெ.கணேசன் அவர்களின் திருவுருவ படத்தை தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களின் தந்தை வெ.கணேசனார் அவர்களுக்கு திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் சிறை கண்ட செம்மல் என பெயர் அழைத்து அழகு பார்த்தார். 

திமுகவின் மூத்த முன்னோடியும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களின் தந்தை முன்னாள் மாவட்ட பிரதிநிதி  வெ.கணேசன்  அவர்களின் திருவுருவ படத்தை தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர்-காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து மறைந்த கணேசனின் கழகப்பற்று குறித்து புகழை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையேற்றினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், பனையூர் பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த மாநில-மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



No comments

Thank you for your comments