Breaking News

மாநகராட்சி பள்ளி மற்றும் பூங்கா அருகில் குப்பை குவியல்... சுகாதார சீர்கேடு

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  20 வது வார்டு போயம்பாயையம் கிழக்கு குருவாயூரப்பன் நகரில், மாநகராட்சி பள்ளி மற்றும் பூங்கா அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் அந்த  பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது; கடும் துர்நாற்றமும் வீசகிறது.... நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்...

மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை மாடுகள்  கிளறி சாலை முழுவதும் பரவசெய்கின்றன.. சாலையில் பரவியுள்ள குப்பைகள் காற்று வீசும் போது பறக்கின்றது... இதனால்  வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.   அந்த சாலைவழியாக பொதுமக்கள் நடந்து செல்ல கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்..

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது... 

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி அங்கு மருந்து தெளிக்கவேண்டும்... என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குப்பை மலைபோல் குவிந்த பின்புதான் குப்பைகளை அகற்றுகின்றனர்... அப்படி அல்லாமல் குப்பை சேராமல் தினம் தினம் குப்பை கழிவுகளை அகற்றவேண்டும்... என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. 


 

 

No comments

Thank you for your comments