வண்ண வண்ண கோலங்களில் முக கவசம் விழிப்புணர்வு... அசத்திய காஞ்சி பெண்கள்..
காஞ்சிபுரம்
மாட்டுப்பொங்கல் தினத்தில் கால்நடைகளை போற்றும் விதமாக வண்ண வண்ண கோலங்கள் வரைந்தும், அதேநேரத்தில் முக கவசம் விழிப்புணர்வும் கோலத்தில் மூலம் ஏற்படுத்தும் காஞ்சி பெண்கள்
தமிழர்களின் பாரம்பரிய விழாவான தைப்பொங்கல் முதல்நாள் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதத்தில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் நன்றிக்கடன் செலுத்தும் தினமாக பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் கால்நடைகளை கௌரவப்படுத்தும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் தங்கள் வீட்டு கால்நடைகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாடுகளுக்கு அழகுபடுத்தும் விதமாக பல வண்ண அலங்கார பொருட்கள் கொண்டு அழகுபடுத்தி பொங்கலிட்டு கொண்டாடுவது வழக்கம்.
அவ்வகையில் இன்று அதிகாலை காஞ்சிபுரத்திலுள்ள வீடுகளில் பெண்கள் கால்நடைகளின் உருவங்களை வண்ண வண்ண கலர் பொடிகளால் உருவாக்கி மாட்டுப்பொங்கல் தினத்தினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments