நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி துவக்கம்... பிப். 1 ல் பட்ஜெட் தாக்கல்
புதுடெல்லி :
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்க இருக்கிறது. 2 கட்டமாக மத்திய பட்ஜெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.
2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
அதன்படி, ஜனவரி 31ம் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும்
மார்ச் 14ம் தேதியிலிருந்து ஏப்ரல் 8ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
No comments
Thank you for your comments