கலை நிகழ்ச்சியுடன் குடியரசுதின விழா அலங்கார ஊர்தியை பார்வையிட்ட பொதுமக்கள்
ஈரோடு, ஜன.30-
தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசுதின விழாவில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியினை தொடங்கிவைத்ததைத் தொடர்ந்து, அலங்கார ஊர்தியானது ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.அதனைத் தொடர்ந்து, கலைப்பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சியினை பொதுமக்கள் பார்வையிட்டர்.
தமிழ்நாடு முதலமைச்சர் 26.01.2022 அன்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை - குடியரசுதின அலங்கார அணிவகுப்பில் இந்தியவிடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்றவகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 28.01.2022 ஈரோடு மாவட்டத்திற்கான அலங்கார ஊர்தியினை ஈரோடு மாவட்டம், பவானிகாவிரி ஆற்றுப்பாலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்றஉறுப்பினர் ஆகியோர் வரவேற்றார்கள்.
தொடர்ந்து, இந்த அலங்கார ஊர்தியானது, பொதுமக்களின் பார்வைக்காக, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் இன்று (30.01.2022) கலைப்பண்காட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இக்கலை நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கலைநிகழ்ச்சியின் நிறைவாக இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது.
மேலும், இந்த அலங்கார ஊர்தியானது, நாளை (31.01.2022)மாலை ஈரோடு மாவட்டத்திலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு புறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியினை கண்டுகளித்து பயன் பெறலாம் எனதெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார், உதவிமக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) செ.கலைமாமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments