தமிழகத்தில் ஏழைகளுக்கு மட்டும் வருமானம் தரும் திட்டம் தேவை Aravind Subramanian
சென்னை, ஜன.12-
தமிழகத்தில் பணக்காரர்களை விலக்கிவிட்டு ஏழைகளுக்கு மட்டும் அடிப்படை வருமானம் தரும் திட்டம் தேவை என்று முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறினார்.
தமிழக அரசு தமிழகத்தில் நலிந்த பிரிவினரின் நலனைக் காப்பதற்காக உருவாக்கியுள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தை முழுமை பெறச் செய்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றும் அரவிந்த் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கிய வளர்ச்சி சவால்கள் அதற்கு தேவையான கொள்கை மாற்றங்கள் என்ற பெயரில் சென்னை சர்வதேச மையம் திங்களன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசும்பொழுது முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான அரவிந்த் சுப்ரமணியம் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
சமூக வளர்ச்சித் துறையில் தமிழ்நாடு ஒரு வெற்றிகரமான மாடலாக விளங்குகிறது. இந்த வகையில் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக ஏழைகளுக்கான அடிப்படை வருமான திட்டம் அமையும்.
இத்திட்டத்தில் ஒரு பகுதி தேவை இல்லாமல் கசிந்து வீணாக கூடும். அதனைத் தவிர்க்க திட்டத்தை உருவாக்கிய பின் மீண்டும் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். யாருக்கு வருமானம் தேவையோ அவர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் வகையில் திட்டத்தை சிறப்பான வகையில் வடிவமைக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் வருமானம் தரவேண்டியதில்லை இந்தத் திட்டத்தில் இருந்து பணக்காரர்களை விலக்கி விடலாம். மற்றவர்களுக்கு மட்டும் திட்டத்தின் பயன் கிடைக்கும்படி செய்யலாம்.
ஏழைகளின் கண்டு பிடித்து அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதை விட பணக்காரர்களை கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து விலக்கிவிடுவது சுகமாக இருக்கும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தின் வளர்ச்சி பாதை தடுமாறி போய்விட்டது. அதற்கு பல காரணங்களை கூறலாம் இந்தியா சந்தித்த பொருளாதார சவால்கள் எல்லாம் தமிழகத்தையும் பாதித்தன அத்துடன் தமிழகத்தில் நிர்வாகம் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் சீராக அமையவில்லை அரசியல் நிலைமை இல்லாமல் போய்விட்டது என்று அரவிந்த் சுப்ரமணியம்கூறினார்.
இந்தியாவில் இப்போது செழித்து வளரும் துறையாக யூனிகார்ன்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த யூனிகார்ன்கள் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் 80 யூனிகான் தோன்றியுள்ளன.
யூனிகார்ன் நிறுவனம் என்பது துவக்கத்திலேயே 100 கோடி டாலர் முதலீடு கொண்டதாகும். ஆனால் தமிழகத்தில் தொழில்நுட்பம் திறன் உள்ள தொழிலாளர்கள் இருந்தபோதிலும் 3 யூனிகார்ன்கள் மட்டும் தோன்றியுள்ளன.
செயல் துடிப்பு உள்ள இந்தத் துறையில் தமிழகம் பின்தங்கி உள்ளது இதனை சீராக்க தமிழக அரசு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இது மட்டும் தமிழகத்துக்கு போதுமானது அல்ல தமிழ்நாடு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகிற ஏற்றுமதிக்கு தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் தமிழ்நாடு பாரம்பரியமாக ஜவுளி காலனி மோட்டார் வாகனத் துறைகளில் முன்னேறிய மாநிலம் ஆகும்.
இந்த துறைகளில் முன்னோடியாக தமிழக விளங்கியது இத்துறைகளில் சிலவற்றை இப்பொழுது தமிழகம் சற்று பின்தங்கி உள்ளது.
சீனா இப்பொழுது பணக்கார நாடாக மாறிவிட்டது அதனால் அதற்கு போட்டியிடும் திறன் இப்பொழுது குறைந்து வருகிறது.
ஜவுளி. காலணி, மோட்டார் வாகனத் துறையில் இருந்து சீனா 2010 முதல் வெளியேறி வருகிறது. அதனால் 150 பில்லியன் மதிப்புள்ள ஏற்றுமதி வாய்ப்புக்கள் நம் முன் உள்ளன. இந்த வாய்ப்புக்கள் இப்பொழுது வியட்நாம் பங்களாதேஷ் இந்தோனேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு போகின்றன. இந்த ஏற்றுமதி வாய்ப்பு ஒரு பகுதியே தமிழ்நாடு கைப்பற்ற உரிய வாய்ப்பு வசதிகளுடன் உள்ளது என்றும் அரவிந்த் சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு சந்திக்கும் முதலீடு மூலப்பொருள் பற்றாக்குறை ஆகியவைகளுக்கு நாம் முக்கியமாக தீர்வு கண்டாக வேண்டும் தமிழகத்தின் வருமானத்தில் பெரும்பகுதி வட்டி செலவுக்கு போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு மிக முக்கியமான துறைகளில் நாம் சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் 1 சொத்துவரி இன்னொன்று மின்சாரத்துறை.
நாம் புதுமையான முறையில் அவற்றை திருத்தி அமைக்க வேண்டும் மின்சார துறையை பொறுத்தமட்டில் தமிழகத்தில் பெரும் கடலுடன் உள்ளது அந்தப் பிரச்சனைக்கு நாம் தீர்வு கண்டாக வேண்டும் கடன் சுமை தாங்க முடியாமல் தமிழக மின்சாரத்துறை தடுமாறுகிறது மாநில நிதி ஆதாரங்கள் தமிழகத்தின் மேக்ரோஎக்கனாமிக் நிலை ஆகியவை ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றன.
உற்பத்தி தொழில்களுக்கு மின்சார கட்டணம் குறைக்கப்பட வேண்டும். அந்தக் குறைக்கப்படும் கட்டண விகிதம் மின்சாரத் துறைக்கு வேறு பகுதிகளில் இருந்து செலுத்தப்பட வேண்டும் இந்த மாற்றத்தினால் தமிழகத்தின் தொழில்துறை போட்டியிடும் திறன் மேம்படும் தமிழ்நாடு ஒரு முதலீட்டு மையம் என்ற நிலை இன்னும் கவர்ச்சியானதாக மாற்றம் பெறும்.
இந்தியாவில் நகரம் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் முக்கியமானதாக தமிழ்நாடு விளங்குகிறது தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு 2,500 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது இது ஒரு பகுதி கூட தமிழகத்திற்கு சமமாக நகர்புறம் வளர்ச்சியடைந்த மகாராஷ்டிரம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கிடைப்பதில்லை.
சொத்துவரி மின்சார சீர்திருத்தங்கள் ஆகியவை கத்திமேல் நடப்பது போல் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய துறைகள் ஆகும்.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசு அரசியல் துணிவு, ஊக்கத்துடன் செயல்படுகிறது,
இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் உள்ள உறவு கொந்தளிப்பான வழியாக உள்ளது அதற்கு மிகவும் முக்கியமான காரணம் மத்திய அரசு அதிகாரங்களை தொடர்ந்து தன்வயம் ஆக்கிக் கொள்வதுதான் இந்த பிரச்சனை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் மாநில அரசுகள் திரட்டும் வரி வருமானம் எப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது மறுபரிசீலனை தேவை என்றும் அரவிந்த சுப்பிரமணியம் கூறினார்
No comments
Thank you for your comments