Breaking News

காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா அனைத்து மாநிலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேசத்தந்தை காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தேசியகொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments