700 காளைகளுடன் 300 மாடுபிடி வீரர் பங்கேற்கவிருக்கும் கோவை ஜல்லிக்கட்டு...
கோவை:
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமாக நடத்தப்படும் இந்த வீர விளையாட்டு போட்டி மதுரை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகவும் விமர்சையாக நடத்தப்படும்.
நேற்று ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர், வன்னியன் விடுதி உட்பட பல இடங்களில் கோலாகலமாக நடத்தப்பட்டது.
வெற்றிப்பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்கள், கார்கள் என பல பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து வரும் 21ஆம் தேதி நடைப்பெற இருக்கும் கோவை ஜல்லிக்கட்டு போட்டிக்கு 700 காளைகளுடன் 300 மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த போட்டியில் கலந்துக்கொள்ள 1000 காளைகள் வரை முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் 600ல் இருந்து 700 காளைகள் வரை மட்டுமே களமிரக்கப்பட உள்ளன.
இதில் தென் மாவட்டங்களான தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் இருந்து 200 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, போட்டியை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments