அடுத்தடுத்து ஏவுகணை சோதனை பீதியை கிளப்பும் வட கொரியா
சியோல், ஜன.18-
இந்த மாதம் அடுத்தடுத்து மூன்று முறை ஏவுகணை சோதனைகளை நடத்திய வட கொரியா, நேற்று மீண்டும் இரண்டு ஏவுகணைகளின் சோதனையை நடத்தியுள்ளது.
ஏவுகனை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி மீண்டும் அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகனைகளை சோதித்துள்ளது வட கொரியா. ஏற்கனவே 2017ல் இது போன்று விதிகளை மீறி ஏவுகனை சோதனைகள் நடத்தியதால் அந்த நாட்டுடனான மற்ற நாடுகளின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இருப்பினும் தனது இராணுவ திறனை மேம்படுத்துவதில் வட கொரியா தொடர்ந்து கவணம் செலுத்திவருகிறது. சமீபத்தில் ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது.
உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது வட கொரியா.
அதன் தொடர்ச்சியாக நேற்று வழிகாட்டி ஏவுகணைகளை சோதனை செய்ததாக, வடகொரியா கூறி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 4 முறை வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இதனால் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
No comments
Thank you for your comments