படப்பை குணா ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 5 கோடி நிலம் மீட்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நீர்நிலை புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் மீட்டனர்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில், பெரும் சேதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதைதொடர்ந்து, தமிழகத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், அதிகாரிகள் அனைத்து நீர் நிலைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் குளம் புறம்போக்கு இடம் உள்ளது.
இந்த குளத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபல குற்றவாளி படப்பை குணா வால் ஆக்கிரமித்து, குளத்தை மூடி விவசாய நிலமாக பயிர் செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் துறையினர், மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து, அந்த இடத்தை மீட்கப்பட்டன.
பின்னர் 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம், சமன் செய்யப்பட்டு நிலமாக இருந்த பகுதியை மீண்டும் குளமாக மாற்றும் பணியைத் தொடங்கினர்.
No comments
Thank you for your comments