Breaking News

பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து - உயர்நீதிமன்றம்

சென்னை:

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு மண்டலம் வாரியாக 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடம்  இடஒதுக்கீடு என்ற சட்டம் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி 200 வார்டுகளில் 100-க்குப்பதிலாக 105 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு தொடர்ந்தவர், பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்றால், எண்ணிக்கையில் பாதியாக இருக்க வேண்டும். அதையும் தாண்டியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதனால் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, மண்டலம் அடிப்படையில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments

Thank you for your comments