32 தியாகிகளை நினைவுக்கூறும் வண்ணப் பதாகைகளுடன் குடியரசு தின விழா கொண்டாட்டம்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், அங்கம்பாக்கம் ஊ.ஒ.ந.நி.பள்ளியில், கொரோனா காரணமாக நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி நாட்டின் 73வது குடியரசு தினவிழா கொடியேற்றத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு தலைமையாசிரியர் தணிகைஅரசு தலைமை தாங்கினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய விடுதலைப்போராட்டவீரர்கள் வீர மங்கைகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை குயிலி, மருது சகோதரர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உசி, மகாகவி பாரதி, கர்ம வீரர் காமராசர், வீரன் சின்னமலை, அழகு முத்துகோன் காயிதே மில்லத் இம்மானுவேல் சேகரன் உள்ளிட்ட 32 தியாகிகளை நினைவுக்கூறும் வகையில் அவர்களின் வண்ணப்படங்கள் பதித்த பதாகைகளை ஏந்தி நின்றபடி அவர்களின் தியாகங்கள் குறித்து மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை அறிவியல் ஆசிரியர் சேகர் இடைநிலை ஆசிரியர் சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
இணையவழியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குக் கொண்டு மாநில மண்டல மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகள் விழாவில் பாராட்டப்பட்டனர்.
முன்னதாக பள்ளியின் கணித ஆசிரியை இலதா வரவேற்றார்.
தேசியக்கொடியை ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஏற்றிவைத்தார். ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சுதா முருகேசன், கல்வியாளர் செங்குட்டுவன், வார்டு உறுப்பினர்கள், தூய்மைக்காவலர்கள் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் ஆசிரியை பொற்கொடி நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
No comments
Thank you for your comments