Breaking News

ஜன.20-ம் தேதி நடைபெறவுள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பா?

சென்னை, ஜன.5-

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியில், புதிய படிப்புகள் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நேரடி தேர்வு முறைதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்றாக இருக்கும் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, கொரோனாவால் கல்வித்துறை அதிகம் பாதிக்கப்பட்டு விட்டது என்றும் குறிப்பிட்டார்.

சென்னை பல்கலைக்கழகத்தை மீண்டும் தரம் உயர்த்துவது பேராசிரியர்களின் கையில்தான் உள்ளது என்று கூறிய அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments