11 கொலைகள் ... பிரபல ரவுடி கைது
பிரபல ரவுடி தியாகு கைது காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகராஜன் என்கிற தியாகு மீது11 கொலைகள், 15 கொலை முயற்சிகள், கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, பணம் பறித்தல், உள்ளிட்ட 63 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவற்றில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்து தியாகு தலைமறைவானார்.
இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் தியாகுவை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் தியாகு பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அங்கு விரைந்த போலீசார், தியாகுவை கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர் இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் காஞ்சிபுரம் அழைத்து வந்த குற்றவாளி தியாகுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்பிறகு காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்த இருக்கிறார்கள்
No comments
Thank you for your comments