காட்பாடியில் வினோத திருடன்!
காட்பாடி, டிச.31-
நேற்று முன்தினம் இரவு காட்பாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீ அனுசுயா சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கடையில் உள்ள உயர்தர சாக்லேட்டுகள் அனைத்தையும் தின்று தீர்த்து உள்ளான்.
ஆனால் கல்லாவில் உள்ள பணத்தில் ஒரு ரூபாய் கூட அவன் திருடவில்லை என்பது அதிசயம்.
சாக்லேட் தின்றுவிட்டு பக்கத்தில் உள்ள கடை மாடி மீது ஏறி உள்ளான். அங்கு உள்ள கடையின் பூட்டை உடைத்து இருக்கிறான்...
பிறகு அந்த கடையில் எந்தவித பணமும் பொருட்களை அவன் திருடவில்லை அதற்கு மாறாக அதே இடத்தில் இயற்கை உபாதை கழிவை ஏற்படுத்தி அங்கிருந்து சென்றிருக்கிறான்.
இந்த இரண்டு கடைக்காரர்களும் இந்த செயலை எண்ணி சிரிப்பதா வேதனைப் படுவதா என்று முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
🔏 ஜெயகாந்தன்
No comments
Thank you for your comments