பூட்மேஸ்திரி, தூய்மைப் பணியாளர் காலிபணியிடங்கள் அறிவிப்பு
வேலூர்:
வேலூர், மத்திய சிறையின் காலணிகள் உற்பத்தி தொழிற்கூடத்தில் காலியாக உள்ள ஒரு பூட்மேஸ்திரி (Boot Maistry) பணியிடம் மற்றும் கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள இரண்டு தூய்மைப் பணியாளர் (Sanitary Worker) பணியிடங்கள் ஆகிய பதவிகளுக்கு புதியதாக பணி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மத்திய சிறையில் நடைபெறவுள்ளது.
இப்பதவிகளுக்கு கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் (ஆண்கள் - Male)) உரிய கல்வி, ஜாதி சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை (Xerox) விண்ணப்பத்துடன் இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். சான்றிதழ்கள் சரிபார்த்தலில் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு, வேலூர் மத்திய சிறையிலிருந்து அழைப்பாணை கடிதம் மூலம் அழைக்கப்படுவோர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் கலந்துகொள்ள முடியும்
பதவியின் பெயர் மற்றும் பணியிடம் காலியாக உள்ள அலுவலகம்
பதவியின் பெயர் - பூட்மேஸ்திரி (Boot Maistry)
பணியிடம் - மத்திய சிறை, வேலூர்
Communal Roaster General Turn - 01
கல்வி தகுதி
I. அடிப்படை கல்வி தகுதி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
II. Should have obtained a certificate in Foot wear Manufacture conducted by the Industrial Training Institute.
(or)
1) National Apprenticeship Certificate in the Trade of Foot wear”
2) Should have practical experience of not less than five years with ability to orally express his ideas to the workmen and control them.
காலியிடம் - 01 (One)
சம்பளம் - ரூ.19500 - 62000 (Level-8)
வயது வரம்பு :
SCA / SC / ST - 18-35
MBC / BC / BC(M) - 18-32
OC -18-32
பதவியின் பெயர் - தூய்மைப்பணியாளர் (Sanitary Worker)
பணியிடம்
கிளைச்சிறை, ஆம்பூர் -1
கிளைச்சிறை, செய்யார் -1
Communal Roaster - SC - 01 and MBC and DC - 01
காலியிடம் - 02 (Two)
சம்பளம் - ரூ.15700-50000 (Level-1)
வயது வரம்பு :
SCA / SC / ST - 18-35
MBC / BC / BC(M) - 18-32
OC -18-32
No comments
Thank you for your comments