பேருந்து நிலையம் அருகில் கடைகளில் பயங்கர தீ விபத்து
ஈரோடு:
ஈரோட்டில் பயங்கர தீ விபத்து. நள்ளிரவில் கடைகளில் கொளுந்துவிட்டு எரிந்த தீயினால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்...
ஈரோடு சத்தி ரோடு பகுதியில் பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று (25.12.2021 -சனிக்கிழமை ) இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
Click here to more view 👆 about LVS EYE Hospital Facility |
கடையில் இருந்து கரும்புகை வெளி வந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் வேகமாக பரவிய தீயினால் அருகிலிருந்த கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் உள்ள பெயின்ட், கதவுகள், ஜன்னல்கள், மின்னிணைப்பிற்க்கு பயன்படும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் போன்றவைகள் எரிந்து நாசமாயின.
கடைகளில் பரவிக்கொண்டிருந்தத தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இன்று அதிகாலை வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Click here to more view 👆 about LVS EYE Hospital Facility |
இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து பஸ் நிலையம் அருகில் ஏற்பட்டதால் பொது மக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்க்க திரண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
No comments
Thank you for your comments