மதுக்கூடங்களில் சில்லறை விற்பனை ஒப்பந்தம் தள்ளிவைப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மதுக்கூடங்களில் சில்லறை விற்பனை செய்வதற்கான போதுமான புள்ளி ஒப்பந்தங்கள் வராத காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட மதுபான மேலாளர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சில்லரை விற்பனை கடைகள் மொத்தம் 108 அத்துடன் இணைந்த மதுக்கூடங்களதன தின்பண்ட விற்பனை மற்றும் காலி பாட்டில் சேகரித்துக் கொள்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகள் இன்று நடைபெற இருந்தது.
இதுதொடர்பாக ஒப்பந்த புள்ளிவிவரங்கள் போதுமான அளவு வராத காரணத்தினால் நிர்வாக நலன் காரணங்களுக்காகவும் இன்று இறுதி செய்வதாக இருந்தால் கூட ஒப்பந்தப்புள்ளி பணிகள் அனைத்தும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட மதுபான மேலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லாபகர தொழிலாகக் கருதப்படும் பார்களை எடுப்பதற்கு போதுமான ஒப்பந்தப்புள்ளிகள் வராமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது
No comments
Thank you for your comments