2021 தேசிய கிக் பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் உட்பட பதக்கத்தை வென்று சாதனை
காஞ்சிபுரம்
புனேவில் நடைபெற்ற 2021 தேசிய கிக் பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் உட்பட 10 கிக் பாக்சிங் மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்..
வாக்கோ அசோசியேஷன் ஆப் கிக்பாக்சிங் அமைப்புகள் சார்பில் இந்தியாவில் புனேவில் உள்ள விளையாட்டரங்கில் டிசம்பர் 22 முதல் 25 ஆம் தேதி வரை வாக்கோ இந்தியா ஓபன் சர்வதேச கிக்பாக்சிங் 2021 தேசியளவில் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் பல்வேறு நாட்டிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 50 மாணவர்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்ட கிக்பாக்சிங் வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் காஞ்சிபுரம் ஒன் மேன் தற்காப்பு பள்ளி அகாடமியின் சார்பில் போட்டியில் 16 நபர்கள் பங்கேற்றத்தில் 3 பேர் தங்க பதக்கங்களும், 5 பேர் வெள்ளி பதக்கங்களும், 2 பேர் வெண்கல பதக்கங்களும் பெற்று சாதனை புரிந்து காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இதனையடுத்து நடைபெறவுள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க காஞ்சிபுரம் ஒன் மேன் தற்காப்பு பள்ளி அகாடமியின் கிக் பாக்சிங் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அதையொட்டி தலைமைப் பயிற்சியாளர் ஹரிஷ் வழிகாட்டுதலின்படி இம்மாணவர்கள் தற்பொழுது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிக் பாக்சிங் போட்டிகளில் இம்மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
No comments
Thank you for your comments