Breaking News

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

முறைகேடாக சேர்த்த சொத்துகளை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறித்துவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், கே.சி வீரமணி, சி. விஜயபாஸ்கர். எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி இருந்தது. 

இந்த நிலையில் ஐந்தாவதாவக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி  அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  

தங்கமணி வீடு அமைந்துள்ள பகுதியில் தடுப்புகள்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாறையத்தில் உள்ள  தங்கமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

சென்னை மட்டுமின்றி வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணி தொடர்பாக கர்நாடகாவில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் சிலரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  பி.தங்கமணி (ஏ1) மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்கமணி மகன் தரணிதரன்(ஏ2), மனைவி சாந்தி(ஏ3) மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

2016-2020 அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், முறைகேடாக சேர்த்த சொத்துகளை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக, முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





No comments

Thank you for your comments