Breaking News

பத்திரிகையாளர் நல வாரியம் நடைமுறைக்கு வந்தது - தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பத்திரிகையாளர், மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கை தங்களுக்கான வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அதிமுக ஆட்சியில் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாட்டு மக்கள் தொகையை விட அதிகளவில் இருக்கும் பத்திரிகையாளர் அமைப்புகளை சந்தித்தார். பத்திரிகையாளர் வாரியம் அமைக்கப்படும் என்று சட்டசபையிலேயே அறிவித்தார். ஆனால் ஆட்சி முடியும் கடைசி சட்டசபையில் கூட அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் கடந்த 2021-2022 - ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்

"தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையில், பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும். 

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக , பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் சதவீதம் தொகையை EMAI ஊதியத்திற்கென வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவிக் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Click here 👉 தமிழக அரசு அரசாணை

அரசாணை (நிலை) எண்.171 Dt: December 01, 2021    

நிருவாகம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை-மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம்அமைத்து இரண்டு பணியிடங்கள் உருவாக்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

No comments

Thank you for your comments