மஹேந்ரா மெட்ரிக் பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல், டிச.31-
நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி மஹேந்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஆனந்த் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் தமிழக அரசு முன்னெடுத்துள்ள மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம்! சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்!! குட்பை பிளாஸ்டிக்! வெல்கம் மஞ்சப்பை!! ஏன கூட்டாக முழங்கினர்.
மாணவ, மாணவியர் அனைவரும் தங்களது கிராமம் மற்றும் நகர்ப் பகுதிகளில் மஞ்சப்பை பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
No comments
Thank you for your comments