லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்:
சேலம் மாவட்டம் கிரவல் மண், செங்கல் சூளை மண், மண்பாண்டம் செய்ய களிமண் கிடைக்காத காரணத்தால் செங்கல் விலை 5 ரூபாயிலிருந்து ரூ.9.50 விலையேற்றம் கண்டதாலும் இது சார்ந்த தொழிலாளர்கள், சூளையில் வேலை செய்வோர், லாரி டிரைவர், கிளினர், கட்டுமானம் சார்ந்த அனைத்து தொழில்களும் பாதிகப்பட்டிருப்பதால் மண் எடுக்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் தலைவர் முருகன் தலைமையில் தங்கராஜ், ராஜாமணி, அருள், பூமாலை, பழனி ஆகியோர் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுனர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments