பாலியல் மற்றும் சைபர்குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு
நாமக்கல், டிச.8-
தொடர்ந்து எழும் பாலியல் மற்றும் சைபர்குற்றங்களில் இருந்து தங்களை தற்காப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை குமாரபாளையம் காவல்துறையினர் தனியார் பள்ளியில் மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் காவல் நிலையத்தின் சார்பில் ஜேகேகே ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைபள்ளியில் இணையவழி குற்றத்தடுப்பு, போஸ்கோ சட்ட விழிப்புணர்வு, புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நளினி தேவி ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் காவல் ஆளிநர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments