வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம்
அரூர், டிச. 8:
அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை சார்பில் விவசாயிகள், நில உரிமையாளர்கள் தங்களின் பட்டா, சிட்டாவில் பிழை திருத்தம் செய்தல், நிலப்பிரச்னை தொடர்பாக இந்த சிறப்பு முகாமில், உரிய ஆவணங்களை வழங்கி கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
டிசம்பர் 8 ஆம் தேதி வேடகட்டமடுவு, ஜம்மனஹள்ளி,
டிசம்பர் 10 ஆம் தேதி சந்தப்பட்டி, பட்டுகோணம்பட்டி,
டிசம்பர் 15 ஆம் தேதி கே.வேட்ரப்பட்டி, பி.மல்லாபுரம்,
டிசம்பர் 17 ஆம் தேதி பையர்நாய்க்கன்பட்டி, போசிநாய்க்கனஹள்ளி
ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்களாக அரூர் கோட்டாட்சியர் வே.முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) ஆ.தணிகாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments