Breaking News

வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் மற்றும் குளம் நிரம்பியது...

காஞ்சிபுரம்:

வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் மற்றும் குளம் முழுவதுமாக நிரம்பியது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அத்திவரதர் வைக்கப்பட்ட போதும் அதற்கு முன்பாகவும் பின்பாகவும் இதுவரை நிரம்பாத குலம் தற்போது முழுமையாக நிரம்பியிருக்கிறது குளம்.


பிரசித்திபெற்ற ஆதி அத்தி வரதர் திருக்கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா அனந்தசரஸ் குளத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின்பு 48 நாட்கள் கழித்து அனந்தசரஸ் குளத்தில் நீராவி மண்டபத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் முழுவதுமாக நிரம்பி கோபுரம் வரை நீர் நிரம்பி உள்ளது.

வரதராஜ பெருமாள் கோவில் கோவில் குளத்தில் மொத்தம் 24 படிக்கட்டுகள் தற்போது 21 படிக்கட்டுகள் முழுமையாக நீர் நிரம்பி இருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு தொடர்மழை காரணமாக அத்தி வரதர் கோவில் குளம் நீராவி மண்டபம் என அனைத்தும் நிரம்பி மூன்று படிக்கல் மட்டுமே வெளியே தெரிகிறது.

இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அத்தி வரதர் குளம் நிரம்பி இருக்கிறது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments

Thank you for your comments