Breaking News

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழம்பியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்  பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட  40 ஊராட்சியில் உள்ள 585 பயனாளிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் -உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினர்..

இதனைத்தொடர்ந்து  காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கூறுகையில்,

வீடு கட்டுவதற்காக பயனாளிகளுக்கு தலா ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் தரமான வீடுகளை மூன்று மாதத்தில் கட்டி முடித்து பயனடைய வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யா இளமது, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், வீரராகவன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments