Breaking News

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்திடும் முடிவு வாபஸ்...அரசியல் தலைவர்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்திடும் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஷாஜஹான் வரவேற்பு!


செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடந்தாங்கல் இந்தியாவில் முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். 

இந்த சரணாலயத்திற்கு நத்தை, குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட 27 வகையான பல்லாயிரக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

இந்த பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கல் வருகிறார்கள். 


சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அதிமுக அரசு இறங்கியது இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் வேடந்தாங்கலின் பரப்பை குறைக்க  வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பு 29.51 ஹெக்டேர். கடந்த 1996ல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள குளத்தை சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பளவு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார். 

தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும். இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைத்திடும் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளதாக தலைமை வனத்துறை அறிவித்துள்ளார் இந்த முடிவை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மனதார வரவேற்கிறோம்!

No comments

Thank you for your comments