அநாகரிகமாக பேசி முகம் சுளிக்க வைத்த எம்.எல்.ஏ.,..!
தருமபுரி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயை கொச்சைப்படுத்தி ஒருமையில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தருமபுாி நகராட்சி அலுவலகம் முன்பு கே.பி.அன்பழகன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குரல் போல் பேசி தகாத வார்த்தையில் ஒருமையில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி திமுக சட்டமன்ற தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தருமபுாி நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட கழகம் சாா்பில் மாவட்ட கழக செயலாளா் முன்னாள் அமைச்சா் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்.அம்மா மினி கிளினிக்கை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்.
குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தோ்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து
கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தின் போது சிறப்புரையாற்றிய பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பேசும்போது
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்குவதற்கு என்பதற்காகவே திமுக அரசு பொய் வழக்குகளைப் போட்டு பயமுறுத்தி வருவதாகவும்,
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு காலத்தில் அதிமுக அரசை விமர்சனம் செய்து பேசியதாக முதல்வர் போல் பேசி மிமிக்கிரி செய்தவர் கொம்மால அவன் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை ஒருமையில் பேசியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது
No comments
Thank you for your comments