Breaking News

இந்த இயக்கத்தை கண்ணீர் விட்டு வளர்த்தோம் - பாமக ராமதாஸ்

 தருமபுரி  :

தருமபுரியில்  வன்னியர் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில்  ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  பாமக நிறுவனர் ராமதாஸ் உரையாற்றியதாவது, 

கொரானா தொற்று பரவல் இருந்த காலத்திலும் கட்சியினரையும் தொண்டர்களையும் பார்க்க வந்துள்ளேன்.

அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற செய்தது  திண்ணை பிரச்சாரம்.

சமூக ஊடகத்தை முறையாக பயன்படுத்துதல்,  திண்ணை பிரச்சாரம் முறையாக செய்தால் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை கொடுக்கும்.

திண்ணை பிரச்சாரம் அந்தந்த ஊர்களில் உள்ள  இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். 10.5%இடஒதுக்கீடு கடந்த அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. பெரும்பாலான சமுதாயங்கள் இடஒதுக்கீடு வந்தது தவறு என கூறி உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன.

ஆனால் இந்த திமுக அரசு அமுல் படுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது பாராட்டுக்குரியது. இந்த அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வருகிறது. ஆனால் எதிர்மனுமீது தடையாணை பெற பணி செய்து வருகிறது.

31% சதவீதம் ஒபன் கோட்டாவில் குறைந்தது 5% இடஒதுக்கீடு பெற வன்னியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்க நிர்வாகிகள் பணி மேற்கொள்ள வேண்டும்.

எத்தனையோ பழைய நினைவுகள் சொல்லலாம். தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை இந்த இயக்கத்தை, கண்ணீர் விட்டு வளர்த்தோம்.

சொந்த பணத்தை கட்சிக்கு செலவு செய்து  பாடுபடவேண்டும் என உரையாற்றினார். 

நாம் தமிழகத்தை ஆளவேண்டும். தேர்தலில் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றால்  நாம் ஆட்சி செய்யலாம். 

இனி ஒரு  விதி   செய்வோம்.... ஒரு புது  விதியை உருவாக்குவோம்.... இன்று பாரதியின் பிறந்தநாள்.... விதியை எந்நாளும் காப்போம் என கூறி உரையை முடித்தார்.. 

இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி மாநில துணைத் தலைவரும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மரு.இரா.செந்தில், கி.பாரிமோகன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி, மாநில துணை தலைவர்கள் - பெ.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், வன்னியர் சங்க மாநில செயலாளர் இரா.அரசாங்கம், மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில், மாநில இளைஞர் சங்க செயலாளர் மு.முருகசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் - பெ.பெரியசாமி, ப.சண்முகம், மாவட்டத் தலைவர்கள் – மு.செல்வகுமார், ஏ.வி.இமயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments