Breaking News

விருத்தாசலத்தில் விதவைப் பெண் இலவச மனைப்பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கம்பர் தெரு சிவசங்கரன் மனைவி கொளஞ்சி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தன் கணவரை இழந்து வறுமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில்,  நான்கு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் வறுமை நிலையில் கஷ்ட ஜீவனம் செய்துவருகிறார். வீட்டு வாடகை கூட கொடுக்க வசதி இல்லாமல் அவலநிலையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு  வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments