சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடக்கம்
தருமபுரி
பாப்பிரெட்டிப்பட்டி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-22-ம் ஆண்டு அரவைப் பருவத்தை, மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் ஆலை அரவையை துவக்கி வைத்தார்.
நடப்பாண்டு 7215 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு 240000 மெ.டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2020-21 அரவைப்பருவத்தில் 10.12 சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதின் அடிப்படையில் நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.2929/- வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
மேலும் கடந்த 2020-21-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.19250 வீதம் சம்பந்தப்பட்ட 1538 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ.200.18 இலட்சம் அனுப்பப்பட என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பினைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 95 லாரிகளும், 74 டிராக்டர்களும், 35 டிப்பரும், 17 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அனைத்து விவசாய பெருமக்களும் ஆலைக்கு சுத்தமான கரும்பை வெட்டி அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலும் நல்ல மழை பெய்துள்ள காரணத்தினால் எதிர்வரும் 2022-23 அரவைப் பருவத்திற்கு ஆலை முழு அளவு அரவைத் திறனை அடைய 14000 ஏக்கரில் கரும்பினை பதிவு செய்து 430000 மெ.டன்கள் அரவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும் கூலியை குறைக்கவும் ஆலையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரம் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்க கரும்பு இறக்கும் இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளதால் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கரும்பு வெட்டு இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக நான்கரை அடி இடைவெளியில் அகலப்பார் முறையில் தமிழக அரசின் மான்யத்துடன் நிலத்தடி சொட்டு நீர் பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்து பயனடைய கரும்பு விவசாயிகளை மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
No comments
Thank you for your comments