Breaking News

தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பசுமை சாலை உருவாக்கும் திட்டம்.. பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..

காஞ்சிபுரம்: 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பசுமை சாலை உருவாக்கும் திட்டத்தில் கிழ்கதிர்பூர் ஊராட்சியில் ஆயிரம் பனவிதையை   மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும்  பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுடன் காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களில் ஒரு லட்சம் பன கன்றுகளை  நடவுள்ளதாகவும்,  கீழ்கதிர்பூரில் ஆயிரம்  பன விதைகள் நடும் நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கினார். 

இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஒன்றிய குழு உறுப்பினர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் குமார் ,  ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா ஸ்டேலின், ஒன்றிய பொருளாளர் தசரதன்,வார்டு உறுப்பினர்  ஜமுனா கோபிநாத் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் , விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் சத்யா , தொகுதி துணை செயலாளர் ஸ்டேலின், மாவட்ட துணை செயலாளர் கோபிநாத்,  வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





No comments

Thank you for your comments