பாஜக சார்பில் மாவீரன் பொல்லான் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு:
ஈரோடு, மொடக்குறிச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவீரன் பொல்லான் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 253-வது பிறந்த நாள் விழா சில தினங்களுக்கு முன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, செலம்ப கவுண்டன் பாளையத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவபடத்திற்கு மொடக்குறிச்சி வடக்கு மண்டல தலைவர் எம். செல்வகுமார், பட்டியலின மாநில துனை தலைவர் என்.விநாயகமூர்த்தி, பட்டியலின மாவட்ட தலைவர் பி.அய்யாசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் குரு, குணசேகரன், விவேகானந்தன், துணை தலைவர் பாஸ்கர், காசிபாளையம் மேற்கு மண்டல தலைவர் சுப்பிரமணி, ஐ டி பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித், பட்டியலின மண்டல தலைவர் ராமசாமி ஆகியோருடன் கட்சியின் முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
No comments
Thank you for your comments