Breaking News

கிழ்பேரணமநல்லுர் ஊராட்சியில் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் பேரணமநல்லூர் ஊராட்சி பகுதியில் மக்கள் வரிப்பணம் வீணடிப்பதாக சமூக ஆர்வலர் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், 

கீழ் பேரணமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் என் ஆர் ஜி எஸ் திட்டத்தின் மூலம் 250 அடி நீளம் கொண்ட நீர்வரத்து கால்வாய் சிமெண்ட் மூலம் சீர் செய்யப்பட்டது. இந்த பணிக்காக அரசு சுமார் ரூ.14 லட்சத்திற்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்தது.

ஏரிக்கு நீர்வரத்து தங்குதடை இன்றி வருவதற்காக இருகரையிலும் சிமெண்ட் கற்களால் பாதிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கால்வாய் பணி நடைபெற்று சிமெண்டு கற்கள் பதிக்கப்பட்டன. 

ஆனால்  ஒப்பந்ததாரர்களின் தரமற்ற பணியால் பதிக்கப்பட்ட கற்கள் சரிந்துள்ளன. இதனால் மீண்டும் அந்த இடத்திற்கு சிமெண்ட் கற்கள் பதிப்பதற்காக பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் அந்த பணியை எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் தரமில்லாத பணியைச் செய்வதால் மக்களின் வரிப்பணமும்  வீணாகின்றன... மக்கள் பயன் பெறாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து மக்களின் வரிப் பணத்தையும் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு சரிவர செயல்படுகிறதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்.ஆர்.ஜி.எஸ்., மூலம் நடைபெற்ற பணியின் விவரத்தைக் கூட கல்வெட்டில் எழுதப்படாமல் காணப்படுகிறது தரமில்லாத ஒப்பந்ததாரரிடம் பணி செல்வதால் இதுபோன்று மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


இந்த பணியை செய்த ஒப்பந்தாரரை முறையாக விசாரணைக்கு உட்டபடுத்தவேண்டும் என்றும் குரல் எழுப்பி உள்ளனர். 

தரமில்லதா பணியை செய்யும் ஒப்பந்ததார்களின்  உரிமம் ரத்து செய்யவேண்டும், அவர்கள் செய்யும் பணி சரிவர இல்லை என்றால் திரும்பவும் அந்த பணி செய்வதற்கான மொத்த திட்ட தொகையையும்  ஒப்பந்த தாரர்கள் அரசுக்கு வட்டியுடன் செலுத்தவேண்டும் என்று கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டால்தான் இதுபோன்ற தரமில்லாத பணிகள் நடைபெறாது... மக்கள் வரிப்பணமும் ஒரு நாளும் வீணாகாது... என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

No comments

Thank you for your comments