வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிக சாற்று முறை உற்சவம்
காஞ்சிபுரம்
உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ தாத தேசிக சாற்று முறை உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்படும்
ரத்ன அங்கி அணிவிக்கப்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரத்தில் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
பின்னர் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் மேள தாளங்கள் முழங்க கோவில் வளாக பிரகாரத்தில் உலா வந்தார்.
உலா வந்த வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
No comments
Thank you for your comments