இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் அணியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு:
கேரளாவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியை மாண்புமிகு தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
அகில இந்திய அளவில் கேரள மாநிலம், உடுப்பியில் மூத்தோர் கான மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் பத்தாவது அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டி வருகிற 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு செய்யப்பட்டு அந்த அணிகளுக்கு சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களாக பயிற்சி நடைபெற்று வந்தது.
இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படக்கூடிய இந்திய அணி ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை, போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் ஜி ராஜன் அவர்கள் வீரர், வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தார் .
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசுகையில் போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய உடன் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக வீரர்களை ஊக்குவித்து வாழ்த்தி வீரர்களை வழியனுப்பி வைத்தார்.
No comments
Thank you for your comments