Breaking News

வையாவூர் கிராம மக்கள் திடீரென வாந்தி பேதியால் பாதிப்பு.... எம்எல்ஏ., எழிலரசன் நேரில் ஆய்வு

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் கிராமத்தில் நேற்று (02.12.2021) மக்கள் சிலர் திடீரென வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், BE., B.L., MLA அவர்கள், சுகாதார துறை இணை இயக்குநர் அவர்களிடம் கேட்டுகொண்டதற்கிணங்க அப்பகுதியில் வீடுவீடாக சென்று நடைபெற்ற மருத்துவ முகாமினை இன்று (03.12.2021)  நேரில் சென்று ஆய்வு செய்தார்.   

ஆய்வின் போது, வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் திரு.க.தேவேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் செ.உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு அலுவலர்கள், மருத்துவ குழுவினர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.



No comments

Thank you for your comments