Breaking News

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்பு

குன்னூர், டிசம்பர் 9-

முப்படைகளின் தலைவர் பிவின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 அதிகாரிகள் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை வியாழக்கிழமை (9-12-2021) அதிகாலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் விமானிகள் பறக்கும் உதவியாளர்கள் ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படுகின்றன இதற்கு வாய்ஸ் ரெக்கார்டர் என்று பெயர்.

ஹெலிகாப்டர் அல்லது விமானம் பறக்கும் பொழுது அதன் என்ஜின்களின் அனைத்து வகையான இயக்கங்களும் மற்றொரு கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. அதன் பெயர் ஃப்ளைட் ரெக்கார்டர்.

இந்த இரண்டு கருவிகளும் சேர்ந்ததுதான் விமானம் அல்லது ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி ஆகும்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிற கடைசி வினாடி வரை தகவல்கள் எல்லாம் இந்த இரண்டு கருவிகளிலும் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்யும் பொழுது விபத்து எப்படி நடந்தது என்பதை துல்லியமாக அறிய இயலும்.

விபத்து நடந்த பகுதியை முழுக்க ராணுவம் புதன்கிழமை மாலை முதல் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அப்பகுதிக்குள் வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்த ஹெலிகாப்டரின் பாகங்களை சக்தி வாய்ந்த விளக்குகளைப் பயன்படுத்தி இராணுவவீரர்கள் தேடி சேகரித்தனர் அப்பொழுது வியாழன் அன்று அதிகாலை கறுப்புப்பெட்டி முழுக்க மீட்கப்பட்டது.

இனி இந்த கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் பொழுது விபத்துக்கான விபரம் வெளியாகும் கருப்புப் பெட்டியை பரிசோதிப்பது எப்பொழுது என்ற தகவல் இன்னும் அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

இதற்கு இடையில் சுற்றுலா வந்த ஒருவர் எடுத்த வீடியோ பரவலாக இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஹெலிகாப்டர் ஒன்று மேகமூட்டத்தில் மறையும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments